Pages

Monday, September 2, 2013

புதிய ஓய்வூதிய மசோதா (PFRDA Bill) இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் ஆவதை எதிர்த்து இன்று (02.09.2013) மாலை 05.00 மணிக்கு மத்திய/ மாநில தொழிற்சங்கங்களோடு இணைந்து TNPTF மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்

புதிய பென்சன் திட்ட மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வரும் மத்திய அரசு, இன்று அம்மசோதாவை நிறை வேற்ற இன்றைய பாராளுமன்ற அலுவல் குறிப்பில் வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த மசோதாவை இடது சாரிகள் மட்டுமே எதிர்த்து வருவது மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சில மாற்றங்களை செய்து இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதற்கட்டமாக மத்திய/ மாநில அரசு ஊழியர் சங்கங்கள் (CITU, DREU, LIC, BSNLEU, BEFI, TNGEA மற்றும் TNPTF) இன்று அறிவித்திருக்கும் போராட்டத்தில் அச்சங்க கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் பங்கு கொள்கிறது. 

அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கும் இம்மசோதாவை நிறைவேற்றாமல் தடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வலுக்கொண்டு இம்மசோதாவை மத்திய/ மாநில தொழிற்சங்கங்கள் இணைந்து போராடினால் மட்டுமே சாத்தியம் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.