ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழை உள்ள கேள்விகளை பார்த்த, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை செம்மொழியாக அறிவித்த நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; தேர்வு முடிவு வெளியிட, தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
மதுரை, புதூர் விஜயலட்சுமி, தாக்கல் செய்த மனு: முதுகலை பட்டதாரி தமிழாசிரியர், 605 பணி இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஜூலை 21ல் தேர்வு நடந்தது. "பி&' வரிசை வினாத்தாளில், 150 கேள்விகளில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. உதாரணமாக, வினா, 70ல், "ஆதுகில கிழக்கிந்திய கம்பெனி யாருடைய ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையை பெற்றது; வினா 75ல், தமிழ்மொழி பெருமை மிக்க பழைய வரலாறு உடையதாகும் என்று உரைத்தவர்?; என பிழைகள் உள்ளன.
இவற்றிற்கு, முழு மதிப்பெண் வழங்கக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பித்தேன்; நடவடிக்கை இல்லை. அச்சுப்பிழை உள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார். வினாத்தாளை ஆய்வு செய்த நீதிபதி, எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தமிழை செம்மொழியாக அறிவித்த நிலையில், பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; இதைக் கண்டு வெட்கப்படுகிறேன்.
இதுபோல் ஒரு வழக்கு, சென்னை ஐகோர்ட் முதன்மை பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சில குறைபாடுகளை சுட்டிக் காட்டினர். "எதிர்காலத்தில், இம்மாதிரி தவறுகள் நடக்காது"என, கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், அதிகாரிகள் குறித்த கருத்தை, ஐகோர்ட் திரும்பப் பெற்றது. அதிகளவில் ஆசிரியர்கள் நியமனத்திற்காக, தேர்வு நடத்தும் போது, வினாத்தாள் தயாரிப்பதில், அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட, தடை விதிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் இயக்குனர், செப்., 16ல் ஆஜராக வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
idu mathiri caseku vera courtla judgement koduthanga
ReplyDeleteஇது மாதிரி பிரச்சனைக்கு வேறு நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்துள்ளா?
ReplyDeleteஎன்ன முடிவு வரும் ஏ,சி,டி தேர்வு எழுதியவர்களுக்கு இந்த அரசு என்ன செய்யும்?
ReplyDeleteதேர்வு முடிவு வருமா? இல்லை கடைசி வரைக்கும் வராதா?
ReplyDeleteதேர்வு முடிவுகளை எதிர்பார்த்து வேறுபணிக்கும் செல்லஇயலாமல் காத்துக்கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு என்னபதில் சொல்லப்போகிறார்கள். பிழைகள் இருப்பது உண்மைதான்.ஆனால் அவற்றில் வினாவைப் புரிந்துகொள்ள இயலாதளவிற்குப் பிழைகள் இருப்பது மூன்று அல்லது ஐந்து வினாக்களில் மட்டுமே என்பதையும் தமிழ் உலகம் உணரவேண்டும்.
ReplyDeleteBHUPATHI BM PUP SCHOOL G B R KANDIGA PALLIPAT UNION THIRUVALLUR DIST MANONMANIYAM SUNDARANAR UNI M A RESULT
ReplyDeletePG TAMIL A C D SERIES CANDIDATES GET READY TO FILE WRIT AS 'DO NOT CONDUCT RE EXAM'
ReplyDeleteConducting re exam for PG TAM wil give heavy pressure among A C D Series candidates. Trb shall give right solution to B series candidates.
1/3rd of the candidates written with normal question paper without spelling mistakes. So that by giving right sol to B series as deleting the mistaken qns or any other suitable measures wil b the right way.
TRB wil consider the pressure faced by B series candidates in exam hall. So that the solution to b produced by trb on monday sep 16th in madurai Hc wil b sure acceptable by all series in particular B series.
B series candidates has the right to file writ to give grace marks or give suitable solution as they faced critical minutes in exam hall.
Do note that most of the qns with spelling mistakes are understandable. Only 15-12 qns are more critical to answer for average candidates. Asking remedy for that wil b better sol.
On the same way, cancelling the exam & pushing A C D series candidates those who written good without any spelling mistakes by pouring their complete hard work to write the re exam once again is not a justice.
75 % of the pg tam candidates get affected if the exam cancelled.
By the way A C D pg tam series candidates also hav the right to file writ against pg tam re exam.
Pg tam A C D Series candidates get ready to file the writ for not conducting pg tam re exam as 75% of the candidates written without any spelling mistakes.