Pages

Tuesday, September 24, 2013

முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வா?

முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வா இல்லை அரசுடன் ஆலோசித்து எந்த மாதிரியான முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியம் உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப் போகிறது என முதுகலை ஆசிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதில் தமிழ் தேர்வு எழுதிய பெரும்பாலோரின் கருத்து மறுதேர்வு வேண்டாம் என்பதே !ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்யும் அறிக்கையினை பொருத்தே உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு அமையும். தீர்ப்பு பற்றிய செய்தி கிடைத்ததும் உடனடியாக நமது தளத்தில் செய்தி வெளியிடப்படும்.

3 comments:

  1. முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமன தேர்வில்அச்சுப்பிழையுள்ள கேள்விகள்இடம்பெற்றதால், மறு தேர்வு நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை இன்று(செப்., 25) பரிந்துரை.
    மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு:முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள்பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் ஜூலை 21 ல் தேர்வு நடந்தது. "பி' வரிசை வினாத்தாள்களில் சரியானவிடையை தேர்ந்தெடுத்து எழுத 150 கேள்விகள் இருந்தன. 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு, முழு மதிப்பெண்வழங்க வேண்டும். . இதுபோல்,திருச்சி அந்தோணி கிளாரா மற்றொரு மனு செய்தார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன் இன்று(செப்., 25 )மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அச்சுப்பிழையுள்ள கேள்விகள்இடம்பெற்றதால், மறு தேர்வு நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை இன்று(செப்., 25) பரிந்துரை.செய்து உத்தரவிட்டது மீண்டும் வழக்கு விசாரணை செப் 30 அன்று நடைபெற உள்ளது.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.