அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வினோதமான முறையில், இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.
கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளில், இடம் மாறுதல் செய்யப்படும் ஆசிரியர், தற்போது பணியாற்றும் பள்ளியில் 2 நாட்களும், இடமாறுதல் பெற்றுச் செல்லும் பள்ளியில் 3 நாட்களும் பணியாற்ற, உத்தரவு வழங்கப்படுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு அலைச்சலும், மாணவர்களுக்கு கல்வி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையால் தான், கள்ளர் சீரமைப்புத் துறை, இந்த விநோத உத்தரவை பிறப்பித்திருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.