Pages

Sunday, September 8, 2013

இரட்டைப்பட்டம் - வழக்கு எப்போது முடிவுக்கு வரும் கலக்கத்தில் காத்துகொண்டு ஆசிரியர் நண்பர்கள்

                                            ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காகவும் இடமாறுதலுகாகவும் காத்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் வழக்கு காலம் தாழ்ந்து போவதால் ஆசிரியர்கள் மத்தியில்
பெரும் மனஉளச்சலை  ஏற்படுத்தி உள்ளது .இதனால் சரியான முறையில் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செய்களில் ஈடுபட முடியாமல் உள்ளனர்.

நீதிமன்றமே விரைவாக முடிக்க முடிக்க வேண்டும் என்று நினைக்கும்போது வழக்கை தொடுத்தவர்களும் வழக்கை விரைவாக முடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தால் வழக்கை மிக விரைவாக முடிக்கலாம் .யாருக்கு தீர்ப்பு வரபோகிறது என்பது முக்கியமல்ல !!!

அனைவரும் நம் ஆசிரியர் நண்பர்களே....

பதவி உயர்வுக்காக தொடுக்கப்பட்ட இவ்வழக்கினால் பல ஆசிரியர் நண்பர்கள் தம் சொந்த ஊர்களுக்கு இடமாறுதலில் செல்ல முடியாமல் திணறி வருகின்றார்கள் .


வழக்கை விரைவாக முடித்து ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றால் 

இடைநிலை ஆசிரியர்களின் காலிபணியிடமும் தற்போது உள்ளதை விட ஆயிரக்கணக்கான காலிபணிப்பணியிடங்கள் கூடுதலாக ஏற்படும்.

இதனால் TET PAPER -I  யை எழுதி காத்து கொண்டிருபவர்களும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு எப்போது இவ்வழக்கு முடிவுக்கு வரும் என்று வழக்கு தொடுத்தவர்களை விசாரித்த வண்ணம் உள்ளனர்.



இவற்றை எல்லாம் உணர்ந்த நாங்கள் வழக்கை விரைவாக முடித்து அவர்கள் வாழ்கையில் ஒளியேற்ற வழக்கை ஒவ்வொரு முறையும் அரும்பாடுப்பட்டு விசாரணைக்கு கொண்டு வருகிறோம்.மேலும் இந்த வாரமே வழக்கை முடிக்கவும் முழு முயற்சி செய்து வருகிறோம்.



இச்செய்தியானது -  தொடர்ந்து தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு எப்போது இவ்வழக்கு முடிவுக்கு வரும் என வினவும் எதிர்கால ஆசிரியர் நாண்பர்களுக்கு பகிரப்படுகிறது ...

                      
                                  மூன்று வருட குழுவின் சார்பாக...

1 comment:

  1. Case would be completed in the month of November and transfer would be immediately done.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.