Pages

Thursday, September 26, 2013

மாணவர்களுக்கான கேரம் போட்டி பங்கேற்க பள்ளிகளுக்கு அழைப்பு

ஒன்று முதல் ப்ளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள், ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு அரங்கில் வரும், நான்காம் தேதி காலை, 8.30 மணிக்கு நடக்கிறது.இளநிலை பிரிவில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், ஆறு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை பயில்வோர், முதுநிலை பிரிவில் பங்கேற்கலாம். இளநிலை பிரிவில் ஒற்றையர் போட்டியில் முதலிடத்துக்கு, ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடத்துக்கு, 500, மூன்றாமிடத்துக்கு, 250 ரூபாய் வழங்கப்படும்.இரட்டையர் பிரிவில், முதலிடத்துக்கு, 2,000 ரூபாய், இரண்டாம் இடத்துக்கு, 1,000, மூன்றாமிடம் பெறுபவருக்கு, 500 ரூபாயும் வழங்கப்படும். முதுநிலை ஒற்றையர் பிரிவில், முதலிடத்துக்கு இரண்டாயிரம், இரண்டாமிடத்துக்கு, ஆயிரம், மூன்றாமிடம் பெறுபவருக்கு, 500 ரூபாய் வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் முதலிடத்துக்கு, நான்காயிரம், இரண்டாமிடம் இரண்டாயிரம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.முதுநிலை பிரிவில், ஒற்றையர் பிரிவில், ஒரு பள்ளியில் இருந்து, இரண்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். இரட்டையர் பிரிவில், பள்ளி ஒரு குழுவை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இளநிலை ஒற்றையர் பிரிவில் ஒரு பள்ளிக்கு, இரண்டு வீரர்களும், இரட்டையர் பிரிவில் பள்ளி ஒரு குழுவை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒரு போட்டியில் ஒரு வீரர் மட்டும் கலந்து கொள்ள முடியும்.பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர்களிடம் இருந்து வயது சான்றிதழ்களை பெற்று வர வேண்டும், என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் கனகராஜ் கேட்டு கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.