Pages

Wednesday, September 25, 2013

வழக்கு விசாரணை இன்றும் தொடர்கின்றது முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா?

வழக்கு விசாரணை இன்றும் (25ந் தேதி) தொடர்கின்றது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது.
2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.

இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்
உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை   செப். 24ம்தேதி விசாரித்தது நீதிமன்றம் .இன்றைய  விசாரணையில்  மறுதேர்வுக்கு எதிராக சிலர் வாதிட்டனர்  . வழக்கு விசாரணை நாளையும் தொடர்கின்றது.இவ்வழக்கு 25.தேதி  காலையிலேயே  விசாரணை செய்யப்படவுள்ளது.மாலைக்குள்  தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும். முதுகலை ஆசிரியர்  நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து  பட்டதாரிகளும் நீதிமன்றத்தின்  உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.