Pages

Monday, September 23, 2013

மாணவர்களின் சமூக அக்கறை: சரியும் ரூபாய் மதிப்பை அதிகரிக்க பேரணி

"சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிக்க வேண்டும்" என்ற சமுதாய அக்கறையோடு, திருச்சி என்.ஐ.டி., மாணவ, மாணவிகள் நடத்திய பேரணி, பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக ஐ.ஐ.டி., (இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி), என்.ஐ.டி., (நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி) ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் என்றாலே, அவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவர் படிப்பை முடித்தவுடன் பிரபல தனியார் நிறுவனங்களுக்கோ, வெளிநாடுகளுக்கே வேலைக்கு சென்று, தங்களை வாழக்கையை செட்டில் செய்வதில் குறியாக இருப்பர் என்ற மனப்பான்மையே பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

ஆனால், அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை தூக்கி நிறுத்த வேண்டும் என்ற சமூக அக்கறையோடு, திருச்சி என்.ஐ.டி., மாணவர்கள் நடத்திய பேரணி, மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

நேற்று மாலை நான்கு மணிக்கு திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட்டில் என்.ஐ.டி., மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கூடினர். கையில் தமிழிலும், ஆங்கிலத்திலும், பெட்ரோல், டீசல் பயன்பட்டை குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தை அதிகம் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு சிக்கன நடவடிக்கை குறித்த வாசகங்கள் அடங்கிய போர்டுகளை கையில் ஏந்திச் சென்றனர்.

பேரணிக்கு, என்.ஐ.டி.,யில் இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் தலைமை வகித்தார். 20க்கும் மேற்பட்ட மாணவிகளும் பேரணியில் பங்கேற்றனர். பேரணியானது டி.வி.எஸ்., டோல்கேட்டில் துவங்கி ரயில்வே ஜங்ஷன், சென்ட்ரல பஸ் ஸ்டாண்ட், கண்டோன்மெண்ட், அமெரிக்கன் மருத்துவமனை, தலைமை தபால் நிலையம் வழியாக, மீண்டும் டி.வி.எஸ்., டோல்கேட்டை சென்றடைந்தது. இதில் தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாநில மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.

பேரணியின் போது, இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், தற்போது சந்தையில் உள்ள நச்சுப்பொருட்கள் அடங்கிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும், மாணவ, மாணவிகள், தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறிமாறி கோஷமிட்டவாறு சென்றனர்.

இதைப்பார்த்து விபரமறிந்த மக்கள், "பரவாயில்லை படிப்பை பற்றியே சிந்திக்கும் மாணவர்கள் கூட, இந்திய நாட்டின் பொருளாதாரத்தை பற்றி கவலைப்பட்டு, சமூக அக்கறையோடு பேரணியெல்லாம் நடத்துகிறார்களே" என்று ஆச்சர்யத்துடன் பேசிச் சென்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.