Pages

Thursday, September 12, 2013

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி

ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும், குறைதீர்க்கும் முகாம் நடத்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும், அரசு மற்றும் நிதியுதவி பெறும் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய, பண, பணி மற்றும் இதர பலன்களை, உரிய நேரத்தில் பெறவும், நிலுவைகளை உடனுக்குடன் பெற்று, பணி தொய்வடையாமல் இருக்கவும், அனைத்து கல்வி அலுவலகத்திலும், சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, தொடக்கக் கல்வித் துறையில், மாதத்தின் முதல் சனிக்கிழமை, உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திலும், இரண்டாம் சனிக்கிழமை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மூன்றாவது சனிக்கிழமை, தொடக்கக் கல்வி இயக்குனரகம் என்றும், பள்ளிக் கல்வித் துறையில், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், இயக்குனரகம் என, மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.

மாவட்ட அளவில் தீர்க்கப்படாத குறைகள், மாநில அளவில் தீர்க்கும் வகையில், இம்முகாம் நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் இருந்த இம்முகாம்களில், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும், ஆசிரியரல்லாத பணியாளர்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தில், ஆசிரியரல்லாத பணியாளர்களும் கலந்து கொள்ளலாம் என, உத்தரவிட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் நடக்கும் குறைதீர்க்கும் முகாம் நடைமுறைகளையே, இவர்களுக்கும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.