மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை, போலீசார் கண்காணிக்கின்றனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் களுக்கு இணையாக மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட அளவில் பல போராட்டங்களை நடத்தினர். இதன்தொடர்ச்சியாக செப்., 25ல், சென்னையில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பலமாவட்டங்களில் இருந்து வாகனங்களில், சென்னை செல்ல ஆசிரியர்கள் முடிவு செய்திருந்தனர். அதே நேரம், மறியலில் பங்கேற்க தயாராகும் ஆசிரியர்களை, சென்னைக்குள் நுழைய விடாமல், அந்தந்த மாவட்டங்களில் முதல்நாள் தடுத்து நிறுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், சங்க நிர்வாகிகளை கண்காணிக்கும் பணியில் தற்போது போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சென்னையில் செப்.,25 மறியல் போராட்டத்திற்கு செல்ல பஸ்களில் மொத்தமாக "டிக்கெட்'கள் முன்பதிவு செய்திருந்தோம். ஏதோ காரணத்திற்காக அனைத்து முன்பதிவையும் பஸ் கம்பெனிகள் திடீரென ரத்து செய்து விட்டன. போலீஸ் கண்காணிப்பையும் மீறி, மறியலில் பங்கேற்போம், என்றார்.
neengal enna poraattam seidhaalum naanga onnum kodukka maatom... edhukku veenaa ivvalavu dhooram vara Poreenga nu maraimugama solranga...
ReplyDeleteIndha vishayam AMMAvukku theriyumaa...?
ReplyDelete