Pages

Friday, September 20, 2013

தவிப்பில் ஆசிரியர்கள்: மனது வைப்பாரா செயலர்

தமிழகத்தில், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்பு துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 2002ம் ஆண்டுமுதல் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள், வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவு ம் பிற்பட்டோர் நலத்துறைக்கு உட்பட்டது. இவர்கள், தங்களை பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றக்கோரி, 2010ல் கல்வி துறை செயலராக இருந்த சபீதாவிடம் கோரிக்கை வைத்தனர்.இவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி, 119 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 146 பேருக்கு கல்வித்துறைக்கு மாறுதல் பெறுவதற்கான (அரசாணைஎண்: 86) உத்தரவை பிறப்பித்தார்.
இதன்படி, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கள்ளர் சீரமைப்பு துறை ஆசிரியர்கள், 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில், மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி மாறுதல் பெற்றனர்.ஆனால், 2005- 2006ம் ஆண்டு பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறைக்கு, டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட்ட வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு, இந்த அரசாணைபடி துறை மாறுதல் மற்றும் பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை. இதனால், கள்ளர் சீரமைப்பு துறையில் இருந்து பள்ளிக் கல்வி துறைக்கு மாறுதல் கிடைக்காமல் மூன்று மாவட்டங்களுக்குள் மட்டுமே இவர்கள் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் திருப்பதி கூறியதாவது:
வெளி மாவட்டங்களில் இருந்து பணியாற்றும், எங்கள் குடும்ப நிலையை கருதிதான் கல்வித் துறை செயலராக இருந்த சபீதா, ஆணை பிறப்பித்தார். 2006ல் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து போராடியும் மாறுதல் கிடைக்கவில்லை. கல்வி அதிகாரிகளிடம் கேட்டால், பள்ளிக் கல்வி துறையில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால், பிற்பட்டோர் நலத்துறையில் இருந்து எங்களை விடுவிப்பு செய்த பின்தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறுகின்றனர். தேர்வுகள் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முன், எங்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.