Pages

Monday, September 30, 2013

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க கலந்தாய்வு

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டத்தில், தமிழக அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும். இதை 2011 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த 10 அகவிலைப்படியை தமிழகத்திலும் அறிவிக்க வேண்டுóம். மேலும் 50 அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக சேர்க்க வேண்டும்.

தமிழக முதல்வர் தேர்தல் அறிவிக்கையில் கூறியதுபோல், சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதுவரை ஆசிரியர்கள் செலுத்திய தொகையிலிருந்து முன்பணம் பெற அனுமதிக்க வேண்டும். அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தங்களது கல்வி அறிவை வளர்த்துக் கொள்வதற்கு 3 ஆவது ஊக்க ஊதியம் வழங்கவேண்டும். பணியில் சேரும் ஆசிரியர்களின் மதிப்பெண் பட்டியலுக்கு ஒரே வாரத்தில் உண்மைத் தன்மை சான்று வழங்கப்படும் என அறிவித்த அரசு பள்ளித் தேர்வுத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பணம் வழங்கும் பவர் பைனான்ஸ் திட்டம், நாமினல் ரோல் ஆகியவை ஆன்-லைனில் பதிவு செய்ய, பிளஸ் 2 கணிப்பொறி மாணவர்களின் படிப்புத் திறனுக்கும், கணிப்பொறி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்க கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்டச் செயலர் பாஸ்கரன் வரவேற்றுப் பேசினார். மாவட்டப் பொருளாளர் மீனாட்சி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.