Pages

Wednesday, September 25, 2013

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது: தமிழக அரசு

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வழக்குரைஞர் பழனிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். இது தொடர்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிக்கையில், ஏற்கனவே மாநில அரசுகள் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று தெரிவித்துள்ளது. ஆதலால் தமிழக அரசு இந்த முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் நீதிபதி சத்திய நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால்தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது. எனவே இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதி தேர்வில் மதிப்பெண் வழங்க தேவையில்லை" என்று கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து வழக்கு விசாரணையை அக்டோர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2 comments:

  1. முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமன தேர்வில்அச்சுப்பிழையுள்ள கேள்விகள்இடம்பெற்றதால், மறு தேர்வு நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை இன்று(செப்., 25) பரிந்துரை.
    மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு:முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள்பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் ஜூலை 21 ல் தேர்வு நடந்தது. "பி' வரிசை வினாத்தாள்களில் சரியானவிடையை தேர்ந்தெடுத்து எழுத 150 கேள்விகள் இருந்தன. 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு, முழு மதிப்பெண்வழங்க வேண்டும். . இதுபோல்,திருச்சி அந்தோணி கிளாரா மற்றொரு மனு செய்தார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன் இன்று(செப்., 25 )மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அச்சுப்பிழையுள்ள கேள்விகள்இடம்பெற்றதால், மறு தேர்வு நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை இன்று(செப்., 25) பரிந்துரை.செய்து உத்தரவிட்டது மீண்டும் வழக்கு விசாரணை செப் 30 அன்று நடைபெற உள்ளது.

    ReplyDelete
  2. TET eda othukeedu patriya vazhakku vissaranaiel october 22 il court yenna theerpu vazhangiyathu? please reply soon

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.