Pages

Friday, September 27, 2013

காலாண்டு விடுமுறையில் அலுவலக பணி அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

காலாண்டு தேர்வு விடுமுறையில், தொடர்ந்து ஆன்லைன் அலுவலக பணி, ஆசிரியர்களுக்கு திணிக்கப்படுவதால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் முதல் பருவத்தேர்வு முடிவடைந்து, அக்டோபர், 2ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில், பவர் ஃபைனான்ஸ் தொடர்பான ஆன்லைன் பணிகளை மேற்கொள்ளும்படி, உத்தரவிடப்பட்டுள்ளனர்.
விடுமுறை தினத்தை கருத்தில், கொண்டு பல்வேறு திட்டத்துடன் இருந்த ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் சார்பில், பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்வதை தடுக்க, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு மாணவருக்கும், வங்கிக்கணக்கு துவக்கி, அவற்றை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக மாணவரது வங்கிக்கணக்கில், தமிழக அரசின் சார்பில், டெபாஸிட் செய்யப்படுகிறது. இதற்காக மாணவர்களது விவரங்களையும், வங்கிக்கணக்கையும், ஆன்லைனில் பதிவு செய்யும் பணி பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கப்படுகிறது.தற்போது செப்டம்பர், 24, 25 தேதிகளில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களையும், செப்டம்பர், 26, 27ம் தேதிகளில், ஏற்கனவே பதியப்பட்ட விவரங்களை சரிபார்த்தலும், செப்டம்பர், 27, முதல் 30ம் தேதிக்குள், ப்ளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரின் விவரங்களையும் பதிய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இப்பணிகளில் ஈடுபட, ஆசிரியர்களுக்கு திடீர் உத்தரவு போடப்பட்டுள்ளதால், விடுமுறை தினங்களில் செய்து வைத்திருந்த பிளான், "பணால்' ஆகிவிட்டது. ஆசிரியர்களை கற்பித்தல் பணிகளை தவிர, மற்ற அனைத்து பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.