பகுதி நேர ஆசிரியர்களை, "காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிக்கு வரவேண்டாம்,' என்ற வாய்மொழி உத்தரவால், செப்டம்பரில் 25 சதவீதம் சம்பளம் "கட்'டாகும், என்ற கலக்கத்தில் உள்ளனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், விவசாயம், கட்டடக் கலை உள்ளிட்ட பாடங்களுக்கு, பகுதி நேர ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மாதம் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக, 5000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை காலங்களில், சிறப்பு வகுப்புக்கள் எடுக்கலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த காலங்களில் பணிக்கு வந்துள்ளனர். தற்போது நடந்து வரும் காலாண்டு தேர்வு செப்., 21ல் முடிவடைகிறது. தேர்வு விடுமுறைக்கு பின், அக்., 3 ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். காலாண்டு தேர்வு விடுமுறையில், பகுதி நேர ஆசிரியர்கள், பணிக்கு வர வேண்டாம், என வட்டார வள மைய அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.
இதனால், 12 அரை நாட்களுக்கு பதிலாக, 9 அரை நாட்கள் பணிக்காலமாக கணக்கிடப்பட்டு, 5000 ரூபாய் சம்பளத்தில் 1,300 ரூபாய் குறைவாக கிடைக்கும். இந்த உத்தரவால், பகுதிநேர ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteபகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியம் இனி நேரடியாக பணியாளரது வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையினை (ECS) வழங்கி மாத ஊதியமான ரூபாய்.5000/- த்தினை இனி மாத தொடக்கத்திலேயே பெறும் வகையில் உத்தரவு மகிழ்ச்சியினைத் தந்தாலும், எங்களுக்கு பெரிய கவலையை அளிப்பது ஊதியப்பிடித்தம் மட்டுமே. பள்ளிக்கல்வி அரசாணை (நிலை) எண் (சி2) 177 நாள். 11.11.201ன்படி பணிநாடுனர் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழுஆண்டு விடுமுறை நாட்களிலும் பணிபுரியலாம் என்று உள்ளது. ஆனால் கடந்த ஏப்ரல் 2013ம் மாதம் பள்ளி வேலைநாட்கள் குறைவானதால் எங்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு ரூபாய்.3750/- (9 நாட்களுக்கு மட்டும்) வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று நடப்புக் கல்வியாண்டில் ஜூன் 2013ம் மாதம் கோடை வெப்பம் காரணமாக பள்ளி திறக்கும் நாள் மாற்றப்பட்டதால் அந்த மாதமும் பிடித்தம் செய்யப்பட்டு ரூபாய்.3750 (ஒன்பது நாட்களுக்கு) வழங்கப்பட்டது. இன்று மீண்டும் இதே மாதிரியான பிடித்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளதால் எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. எங்களுக்கு இந்த மாதிரியான ஊதியப்பிடித்தம் செய்யாமல் முழு தொகுப்பூதியமான ரூபாய்.5000/ வழங்கிட வழிவகை செய்து தந்து எங்களது கவலையினை போக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி !!!