அமெரிக்காவிலிருந்து 36 ஆண்டுகளுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்ட, "வாயேஜர்-1" விண்கலம், சூரிய மண்டலத்தை தாண்டி பயணித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, "நாசா" கடந்த, 1977ம்ஆண்டு, வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 என்ற இரண்டு விண்கலங்களை விண்ணில் ஏவியது. சூரிய மண்டலத்தை பற்றி ஆராய வாயேஜர்-1 அனுப்பப்பட்டது. வாயேஜர்-1ன் பயணத்தை கண்காணிக்க வாயேஜர்-2 சென்றது.
நெப்டியூன்
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள், அதன் துணை கோள்களை பற்றி வாயேஜர் ஏராளமான தகவல்களை அனுப்பியுள்ளது. சனி கிரகத்தின் வளையம் குறித்தும், வியாழன் கிரகத்தின் துணைகோளான, "லோ"வில் உள்ள எரிமலைகள் குறித்தும், நெப்டியூனின் நிலவுகள் குறித்தும், வாயேஜர் அரிய தகவல்களை தந்துள்ளது. ஆனால் சில மாதங்களாக, வாயேஜர்-1 விண்கலத்திடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. எனவே, இது செயல் இழந்துபோய் விட்டதாக நாசா விஞ்ஞானிகள் கருதினர்.
இதற்கிடையே, சமீபத்தில் இந்த விண்கலத்திடமிருந்து அரிய தகவல்கள் கிடைத்தன. சூரிய மண்டலத்தை தாண்டி, பல்வேறு நட்சத்திரங்களுக்கிடையே உள்ள பகுதி குறித்து வாயேஜர் தகவல் அனுப்பியுள்ளது. இதை கண்ட நாசா விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாதனை
இதுவரை எந்த விண்கலமும், சூரிய மண்டலத்தை தாண்டி சென்றதில்லை. நட்சத்திரங்களுக்கிடையே உள்ள பகுதியில் காணப்படும் ஒலியையும் பதிவு செய்து வாயேஜர் அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.