Pages

Saturday, September 7, 2013

அரசுப்பள்ளியில் 8 மாணவர்கள் வெளியேற்றம்: பெற்றோர்கள் முற்றுகை

தூத்துக்குடி முத்தையாபுரம் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் 9 பேரை பள்ளியில் இருந்து வெளியேற்றியதால், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் சமரசத்தால் முற்றுகை கைவிடப்பட்டது.

முத்தையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 8 மாணவர்களை பள்ளி வகுப்பறையில் அனுமதிக்காமல் ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்தனர். தினசரி பள்ளிக்கு வரும் மாணவர்கள் வகுப்பறையில் அனுமதிக்காததால் வெளியில் நின்று கொண்டிருந்தனர்.

இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை காலை 9 மணிக்கு முற்றுகையிட்டனர். பள்ளி தலைமையாசிரியை ஆதிலட்சுமி மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க தெரிவித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சேகர், சேவியர், பிரதீபாஞானம் ஆகியோர் மறுத்து விட்டனர்.

மாவட்ட கல்வி அதிகாரி ரத்தினம் சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட்டதின் பேரில் மதியம் 4 மணிக்கு முற்றுகையை கைவிட்டனர்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.