தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக இறுதியில் தொடக்கக் கல்வி துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி அதில் 7 அம்ச கோரிக்கை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பதாக தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் கடந்த 4 நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக அடிப்படையில் தெரிவித்தனர்.
ஆனால் இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து எவ்வித பதிலும் வராததால் ,தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநர் அளித்த உறுதிமொழியிலும் தங்களுக்கு திருப்தி இல்லையென்றும், இந்த 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக தொடக்கக் கல்வி துறையிலுள்ள பல்வேறு சங்கங்கள் தங்களை அணுகியுள்ளதாகவும், அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்த முடிவு, விரைவில் நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக சென்னையில் நடத்திய 4 நாட்கள் தொடர் போராட்டத்திற்காக அதன் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு "TNKALVI" சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
Porgal mudindhu vidum, Poraattangal mudivadhillai...! Ungal poraattangal vetri pera Vaazhthukkalum...!! Paaraattukalum...!!!
ReplyDelete