பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, தத்கல் திட்டத்தின் கீழ், இன்று இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு, விரைவில் துவங்க உள்ளது. இத்தேர்வை எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், www.dge.tn.nic.in, என்ற இணையதளம் வழியாக, இன்று (17ம் தேதி) மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஒரு பாடத்திற்கு, 125 ரூபாய் மற்றும் சிறப்பு கட்டணம், 500 ரூபாய் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் செலான் மூலம், வங்கியில், தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இணையதளத்தில் பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் கடந்த மார்ச்சில் எழுதி பெற்ற மதிப்பெண் பட்டியலை இணைத்து, 18ம் தேதி, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, கோவை, மதுரை, நெல்லையில் உள்ள அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பித்து, ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.