Pages

Sunday, September 1, 2013

பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஞாபகத் திறனை மேம்படுத்த பயிற்சி

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக, பிளஸ் 1 படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஞாபகத்திறனை மேம்படுத்தும் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.கோவை ரோட்டரி கிளப் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவை இணைந்து பாரத புத்ரா என்கிற நிகழ்ச்சியின் மூலம்
இதற்கான பயிற்சி முகாமை நடத்த உள்ளன.இந்தப் பயிற்சி முகாமில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெற உள்ளது.கோவை தடாகம் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும்.இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் 9843379872 என்ற எண்ணில் பிரதீப் யுவராஜ் என்பவரிடம் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். மேலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் அனைத்துக் கிளைகளிலும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.மேலும் www.srikrishnasweets.net என்ற இணையதளத்திலும் விண்ணப்பப் படிவம் கிடைக்கும்.சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் குமார் பாபு அவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க உள்ளார். இதன் மூலம் ஏழை மாணவர்கள் தங்களது ஞாபகத் திறனை வளர்த்துக்கொள்வதோடு எளிய முறையில் கற்பது தொடர்பாகவும் பயிற்சி பெற முடியும். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதோடு, வாழ்க்கையில் சிறந்த நபராக வரவும் இந்தப் பயிற்சி உதவும்.நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள அதே பள்ளியிலேயே 12 ஞாயிற்றுக்கிழமைகள் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.