பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் நேற்று நடந்தது. வட்டார தலைவர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில்,"ஆசிரியர் தினத்தன்று மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது; ஆசிரியர் சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்திட அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் குழு, ஆசிரியர் சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டுப்போராட்டம் நடத்துவது' உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், வட்டார பொருளாளர் கோமதி, மகளிர் அணி தலைவர் சந்திரா, செயலாளர் ராஜாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைவர் மயில்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 80 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment