Pages

Sunday, August 18, 2013

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிடில் சிறை தண்டனை

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று வருமான வரி கணக்குத் துறை அறிவித்துள்ளது.
ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக வருமான வரியை செலுத்தாமல் இருப்பவர்களுக்கு 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ரூ.25 லட்சத்துக்குக் குறைவான வருமான வரியை செலுத்தத் தவறுபவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் வருமான வரி தாக்கல் செய்யாத ஒருவர் மீதான வழக்கை விசாரித்த தில்லி கூடுதல் முதன்மை மாநகர குற்றவியல் நீதிமன்றம், 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.