சி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற அறிவிப்பால் அதிக சி.பி.எஸ்.இ பள்ளிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழைப் பெற தேவையில்லை என்ற சுற்றறிக்கை கடந்த ஜூலை 8-ஆம் தேதி சி.பி.எஸ்.இ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளி சி.பி.எஸ்.சி பள்ளியாக மாறுவதற்கு சம்பந்தப்பட்ட மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.சி பள்ளியாக மாற்றப்படுவதற்கு ஆட்சேபனை எழும் பட்சத்தில் மட்டும், மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் கொண்ட தனியார் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை பெற வேண்டியது கட்டாயம் என்ற நிலை இந்த புதிய அறிவிப்பால் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.