Pages

Wednesday, August 21, 2013

சமூக சேவையில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?

பி.ஏ., சோஷியல் ஒர்க் எனும் படிப்பானது, சமூக சேவையை விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக விளங்குகிறது. இப்படிப்பு, தாங்கள் வாழும் சமூகத்தைப் பற்றிய பார்வையை, மேம்படுத்தி, விரிவுபடுத்திக்கொள்ள, அதை படிக்கும் இளைஞர்களுக்கு உதவிபுரிகிறது.

மக்களுக்கும், அவர்கள் வசிக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றிய புரிந்துணர்வைப் பெற, இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் முயல்கிறார்கள். இப்படிப்பில், களப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது மற்றும் அதன்மூலம், எதிர்காலத்தில் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களைப் பற்றிய தெளிவு மாணவர்களுக்கு கிடைக்கிறது. இப்படிப்பில் உள்ள தியரி உள்ளடக்கங்கள், வேறுசில பரிமாணங்களைப் பற்றிய அறிவையும், அதன்மூலம் இத்துறைப் பற்றிய அறிவுக்கும் துணை செய்கின்றன.

உளவியல், தகவல்தொடர்பு மற்றும் மேம்பாடு, உடல், மனம் மற்றும் சமூக ஆரோக்கியம், சமூக கொள்கை, என்.ஜி.ஓ. மேலாண்மை போன்ற பல அம்சங்கள் இப்படிப்பின் பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. B.A. in Social work படிப்பு, அதன் மாணவருக்கு ஆழமான புரிந்துணர்வை வழங்குவதுடன், தேவைப்படக்கூடிய, அமைப்பு மற்றும் ஆராய்ச்சி ரீதியிலான திறன்களையும் வழங்குகிறது. ஆனால், எது எப்படியிருந்தாலும்,  சமூகத்தை நேர்வழியில் கொண்டுசெல்ல வேண்டும் என்று நமக்குள் இருக்கும் உந்துதல்தான் வெற்றிக்கு வழிவகுக்கும். உதாரணமாக கூறவேண்டுமெனில், என்.ஜி.ஓ., துறை சார்ந்த சமூகப் பணிகளில் வெற்றி பெற்ற பலர், B.A. in Social work போன்ற படிப்புகளை மேற்கொண்டது கிடையாது.

வாய்ப்புகள்

நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னதாகவே, சோஷியல் ஒர்க் என்பது, ஒரு தொழிலாக இந்தியாவில் இருந்து வருகிறது. அதேசமயம், கடந்த சில பத்தாண்டுகளாக, நாட்டில், அதிகம் தேவைப்படும் ஒரு துறையாக இது வளர்ந்து வருகிறது. இளநிலைப் பட்டத்தை முடித்தபிறகு, அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் பல வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை, களப் பணி சார்ந்தவை. மேலும், அரசு அமைச்சகங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.

Volunteer, fundraiser, research assistant, public engagement, communication intern உள்ளிட்ட சமூகப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். Greenpeace -ல், நிதி சேகரிப்பு மற்றும் சமூக உறவாடல் பிரிவுகளில், புதிய பட்டதாரிகளுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், சர்வதேச சோஷியல் ஒர்க் தொடர்பான ஏராளமான பணி வாய்ப்புகளும் காத்துக்கொண்டுள்ளன. தொழில்துறை மற்றும் வணிகரீதியான அமைப்புகளும், சோஷியல் ஒர்க்கர்களை பணிக்கு அமர்த்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.

மாணவர்களும் மேற்பார்வையாளர்களும்

சோஷியல் ஒர்க் மாணவர்கள், தன்னார்வ தொண்டர்களாகவே கருதப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு முறையான பயிற்சிகள் கிடைப்பதில்லை. சமூக திட்டங்களில், படிவங்களை நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை செய்கிறார்கள். ஆனால், அது சோஷியல் ஒர்க்கர் செய்யும் பணி அல்ல.

பல மேற்பார்வையாளர்கள், சமூகப் பணிகளுக்கு தகுதி பெற்றவர்களாக இருப்பதில்லை. இத்துறையில் பல ஆண்டுகளாக அவர்கள் இருந்தபோதிலும், மாணவர்களுக்கு எதை கற்பிக்க வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் அளவுக்கதிகமான பணி பளுவால் பாதிக்கப்பட்டு, மாணவர்களின்பால் அக்கறை செலுத்த, போதிய நேரமின்றி இருக்கிறார்கள்.

சோஷியல் ஒர்க் பணியில், பல கரடுமுரடான சூழல்களில் பயணம் செய்தல், ஓய்வின்றி உழைத்தல், உடல் நலமில்லாத நிலையிலும் களப்பணியாற்றுதல், வித்தியாசமான மற்றும் எதிர்மறையான மற்றும் கரடுமுரடான மக்களை சந்தித்தல் உள்ளிட்ட பல்வேறு கடினமாக அம்சங்கள் அடங்கியிருக்கும். எனவே, இதுபோன்ற நேரங்களில் சுய ஆர்வமும், உந்துதலும் மட்டுமே துணை நிற்கும்.

சம்பளம்

ஆரம்ப கால சம்பளம் சொல்லும்படியாக இருக்காது. சர்வதேச NGO மற்றும் CSR யூனிட்டுகளில் பணியாற்றும் ஒருவர் நல்ல சம்பளம் பெறுவார். பொதுவாக, இந்திய என்.ஜி.ஓ.,க்கள் குறைவான சம்பளத்தையே பெறுகின்றன.

Greenpeace -ல், ஒரு இளநிலைப் பட்டதாரி, நிதி சேகரிப்பாளராக பணியாற்றினால், மாதம் ரூ.15,000 மற்றும் allowance ஆகியவற்றையே எதிர்பார்க்கலாம். அதேசமயம், junior campaigner என்ற பணிநிலையில், ரூ.30,000 வரை எதிர்பார்க்கலாம்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

பலவிதமான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்

சேர்வதற்கு தகுதியுடைய மாணவர்கள்

சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வமுடைய, பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள்

சேர்க்கை முறை

10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்களுடன், கல்வி நிறுவனம் நடத்தும் தேர்வு அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும்.

வேலை வாய்ப்பளிக்கும் சில முக்கிய நிறுவனங்கள்

தேசிய மற்றும் சர்வதேச என்.ஜி.ஓ.,க்கள், அரசு துறைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்.

பணி பொறுப்புகள்

Programme coordinator, Assistant coordinator, programme manager, programme assistant, community / resource mobiliser, fund raiser, block / district / zonal / regional coordinator counsellor, social scientist, sociologist, research officer, researcher, training coordinator, area manager, psychiatric / school social worker, vocational rehabilitation professional.

எதற்காக பணி

Addiction / substance abuse
Child welfare; child protection services
Clinical / mental health
Rehabilitation of offenders; correctional institutions / prisons
Community development; poverty eradication; rural & urban development
Environment
Family welfare and planning
Policy and planning services
People with special needs / disabilities
Social development; youth work.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.