Pages

Sunday, August 11, 2013

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் ரத்து

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து பெறப்படும் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டங்கள், முறையான படிப்புகளுக்கு சமமாக கருதி தமிழக அரசின் வேலைவாய்ப்பு வழங்க பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அனுமதித்தது.
அதன் அடிப்படையில் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க பள்ளி கல்வித்துறை கடந்த 2000ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் அடிப்படை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் பொதுப்பணிகளில் நியமனம் செய்ய இயலாது என பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை கடந்த 2010ல் புதிதாக அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில் பள்ளிக் கல்வி செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணை:இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றால் பொதுப்பணிக்கு கல்வித்தகுதியாக கருத இயலாது. எனவே பள்ளிக் கல்வித்துறையில் இளங்கலை முடிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் முதுகலைப் பட்டம் முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய சலுகைக்கான பழைய அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.