Pages

Thursday, August 15, 2013

டி.இ.டி., தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்: பட்டதாரி ஆசிரியர்கள்

"ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், டி.இ.டி., தேர்வு பணிகளை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்" என பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.

ஆகஸ்ட் 17, 18ம் தேதி, டி.இ.டி., தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான பணி ஒதுக்கீட்டு முறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ் முதுகலை ஆசிரியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டதால், தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை ஆசிரியர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த அறிவிப்பால், பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும், தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவதாகவும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் தெரிவித்து உள்ளதாவது: டி.இ.டி., தேர்வுகளுக்கு, இரு நாட்களே உள்ள நிலையில், முதுகலை ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தேர்வு எழுத உள்ளவர்களின் மனநிலையை பாதிக்கும்.

அரசு நெறிமுறைக்கு ஏற்ப உரிய முறையில் பணிகளை ஒதுக்கி அறிவித்து உள்ளது. இதை முதுகலை ஆசிரியர்கள் புறக்கணித்தால், அவர்களுக்கும் சேர்ந்து அப்பணிகளை பட்டதாரி ஆசிரியர்களே முழுமையாக ஈடுபட்டு, தேர்வுகளை நடத்தி முடிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. pattathari asiriyakalukkum ithe nilai varumpoluthu theriyum, ippothu puriyathu. ella aasiriyarkalin ottrumaikku throgam ,muthukalai pattathaari asiriyagal ,pattathaari asiriyargal ,idainilai asiriyargal ellorum asiriyarkalthaan, yaarum vaanathil irunthu kuthikka villai.

    ReplyDelete
  2. muthalil tet exam nallabadiya nadathulaam sir, appuram namma kuraigalai athikarikalidam sollalaam,

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.