Pages

Thursday, August 15, 2013

இரட்டைப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை, மூன்று வருட பட்டபடிப்பு பயின்று வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு

ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்  பதவி உயர்வுக்கும் இடமாறுதலுக்காகவும் காத்திருக்கிறார்கள் ஏனென்றால்  இரட்டைப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே பதவி உயர்வும் இடமாறுதலும் பெறமுடியும் என்ற சூழ்நிலை உள்ளது.

இவ்வழக்கை ஒவ்வொரு முறையும் முழு முயற்சி மேற்கொண்டு விசாரணைக்கு எடுத்து வருவது நாங்களே (மூன்று வருட பட்டபடிப்பு பயின்றவர்களின் சார்பாக வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு) இருந்த போதிலும் எதிர்தரப்பினர் ஆர்வம் காட்டாமையால் சில காரணங்கள் சொல்லப்பட்டு வழக்கு தள்ளிபோடப்பட்டு வருகிறது.

இவ்வாறாக வழக்கு தள்ளிபோவதால் பாதிக்கபடுவது ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமே என்பதை உணர வேண்டும். ஏனென்றால் பதவி உயர்வு பெற ஆசிரியர்களின்  முன்னுரிமை (Seniority)  தள்ளிப்போவதுடன் பல பட்டதாரி ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்த பல ஆசிரிய நண்பர்கள் அனைவரும் எப்போது இவ்வழக்கு முடிவு பெறும் என்ற ஏக்கத்தில் உள்ளனர்.அவர்களின் மனக்குமுறல்கள் வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் உணர வேண்டும் .

ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதெல்லாம் எங்கள் தரப்பினால் (மூன்று வருட பட்டபடிப்பு பயின்றவர்களின் சார்பாக வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு.)வழக்கு தாமதம் ஆகிவிடக்கூடாது  என்ற கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் ஆஜராகி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர் .

மேலும் வழக்கைத் தொடுத்தவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமே என்பதை உணர வேண்டும் .வழக்கு எந்த நிமிடத்தில் விசாரணைக்கு வந்தாலும் எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள்  விசாரணைக்கு தயாராக உள்ளனர் .மேலும் ஒவ்வொரு முறையும் விசாரணைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம் .

இதே போல எதிர்தரப்பும் ஆர்வம் காட்டினால் வழக்கை விரைந்து முடிக்கலாம் தள்ளிபோவதால் எந்த பயனும் வர போவதில்லை. இந்நிலையில் வருகின்ற 22.08.2013 அன்று வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் பொழுது ஒரு தரப்பு மட்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் இரு தரப்பும் ஆஜராகினால் வழக்கை அன்றே முடித்து தீர்ப்பு கிடைக்கப் பெற்று ஒட்டுமொத்த ஆசிரியர்கள் வாழ்கையில் ஒளி ஏற்றலாம் என்பதை உணர வேண்டும்.

-இச்செய்தியை நம்மிடம் பகிர்ந்தவர்கள் -
மூன்று வருட பட்டபடிப்பு பயின்று  வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு சார்பாக...

திரு. த.கலையரசன் -ஆசிரியர் -நாகபட்டிணம் மாவட்டம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.