Pages

Sunday, August 18, 2013

பத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை அறிமுகம்

பத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை வரும் கல்வியாண்டியல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வு தான் நடத்த வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பத்தாம் வகுப்புக்கு வரும் கல்வியாண்டு முதல் முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. முப்பருவ கல்வி முறை அறிமுகம் செய்யும் போது பத்தாம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு நடத்துவதா, பள்ளிகளில் தேர்வு நடத்துவதா, என கேள்வி எழுந்தது.

இதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசனை செய்தது. இதில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வாக இருந்தால் மட்டுமே கல்வித்தரம் சிறப்பாக இருக்கும். பள்ளிகளில் தேர்வு நடத்தப்படுமானால் கல்வித்தரம் குறைய வாய்ப்புள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பிற்கு அரசு பொதுத்தேர்வு நடத்த வேண்டும், என பள்ளி கல்வி செயலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதில் முப்பருவ கல்வி முறையில் ஜூன் முதல் செப்., முதல், அக்., முதல் டிச., இரண்டாம், ஜன., முதல் ஏப்., மாதம் வரை மூன்றாம் பருவமும் நடக்கும். ஒரு பாடத்திற்கான 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண் உள் மதிப்பீடு வழங்கப்படும். இது மாணவர்களின் தனித்திறன்களான , கட்டுரை, யோகா போன்றவைகளுக்கு வழங்கப்படும். 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசு பொதுத்தேர்வு அறிவித்தாலும் மதிப்பெண்களில் கிரேடு முறையை கடைபிடிக்கப்படவுள்ளது.

மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை கிரேடு "ஏ 1", 81 முதல் 90 வரை "ஏ 2", 71 முதல் 80 வரை கிரேடு "பி 1", 61 முதல் 70 வரை "பி 2", 51 முதல் 60 வரை கிரேடு "சி 1", 41 முதல் 50 வரை "பி 2", எனவும் அழைக்கப்படும். இதில் 20 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தால் "இ 2" கிரேடு, என அழைக்கப்படும். "இ 2" கிரேடு எடுத்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.

புதிய முப்பருவ கல்வி முறையில் அரசு பொதுத்தேர்வு தான் வேண்டும், என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.