இரட்டைப்பட்டம் வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவி உயர்விற்காக காத்திருக்கும் பட்டம் படித்த இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம் அடைந்து கலக்கத்தில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை வருகிற 22.08.2013 அன்று ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் நீதிபதிகள் மாறாத நிலை இருப்பதால் விசாரணை கண்டிப்பாக 22.8.2013 வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.இ.டி. தேர்வு நிறைவடைந்த நிலையில் தங்களுடைய பதவி உயர்வு கனவு காணல் நீராகி போய் விடுமோ என்ற கலக்கம் அவர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே வழக்கின் போக்கு அனைவராலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் வழக்கை நடத்தி வரும் நண்பர்களிடம் இது குறித்து விசாரித்தபொழுது வழக்கின் இறுதி விசாரணை 22.8.2013 அன்று ஏறத்தாழ நிறைவடைந்து ஒரு வார காலத்திற்குள் தீர்ப்பு வெளியாகிவிடும் என்று தெரிவித்தனர். அவ்வாறு தீர்ப்பு வெளியானால் தீர்ப்பின் தன்மையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொள்ளும் என தெரிகிறது. இதற்கிடையில் டி.இ.டி. தேர்வு முடிவுகளை வெகு விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தம் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானால் மட்டுமே புதிதாக ட்டதாரி ஆசிரியர்களை பணி அமர்த்தவோ, பதவி உயர்வு அளிக்கவோ இயலும். எனவே இரு தரப்பும் வழக்கு விரைவில் முடிந்தால் நல்லது என்ற நிலைக்க வந்துள்ளதால் விரைவில் தீரப்பு வெளியாகி அனைவரின் ஏக்கத்தை போக்கும் என நாம் நம்பகிறோம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.