Pages

Thursday, August 29, 2013

எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நான் பணியாற்றும் சிங்கம்புணரி ஒன்றியத்தில் தொடர்ந்து ஆசிரியர்கள் நேற்று முழுவதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எத்தனை மணிக்கு, எந்த இடத்திற்கு வர வேண்டும்? என்று வினா தொடுத்துக்கெண்டே இருந்தார்கள். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்வதால் உதவித் தொடக்கக்கல்வி அதிகாரிகளும் மாற்று பணி ஆசிரியர்களை நியமிப்பதில் மும்மரமாக
இருக்கிறார்கள். சிங்கம்புணரி இந்தியன் வங்கி கிளைக்கு அருகில் இருந்து பேருந்து கிளம்புவதாக திட்டம். ஆசிரியர்களின் எழுச்சியை பார்த்த வட்டாரக்கிளை நிர்வாகிகள் மற்றுமொரு பேருந்து ஏற்பாடு செய்துவிட்டார்கள். சில ஆசிரியர்கள் தன் சொந்த வாகனத்தில் தன் பள்ளி ஆசிரியர்களுடன் வலம் வர திட்டமிட்டுள்ளார்கள். இதில் மகிழ்வு என்பது தலைமையாசிரியர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதே. நேற்று மாவட்ட சுற்றுபயணத்திலும் திருப்தி. சிங்கம்புணரி எப்பொழுதுமே எழுச்சியான வட்டாரம் என்பது அனைவரும் அறிந்ததே. வட்டார பொதுக்குழு கூட்டம் அதை சற்று கூடுதலாக கிளர்ந்தெழ செய்துள்ளது. நானும் இந்த ஒன்றியத்தில் பணியாற்றுகிறேன் என்பதை கௌரவமாக கருதுகிறேன். நாளை நடைபெறும் இடைநிலை ஆசிரியர்க்கான யுகப்புரட்சியில் பங்கெடுத்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றும்படி தோழமையுடன் அழைக்கிறேன். வெற்றிக்கு பின்னால் பெறப்போகும் ஊதியத்தை எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் தானியங்கி இயந்திரங்களில் எடுக்க வேண்டுமானால் மறியல் போரில் பங்கெடுத்து தங்களது போராட்ட உணர்வை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
செய்தி பகிர்வு : திரு. முத்துபாண்டியன், சிவகங்கை மாவட்டம் 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.