பாடத்திட்டம் தவிர இதர திறன்களும் வேலைவாய்ப்புக்கு அவசியம் என்று, ஐ.பி.எம். செயல் வடிவமைப்பு மேலாளர் லிஸ்தாமஸ் கூறினார்.
ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி கணினிப் பொறியியல் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கணினிப் பொறியாளர்கள் சங்க தொடக்க விழாவில் அவர் பேசியது:
தற்போது பொறியியல் கல்வி பயின்று,நேர்முகத் தேர்வுக்கு வரும் பெரும்பாலான மாணவர்களிடம் பாடத்திட்டம் குறித்த அறிவாற்றல் திருப்திகரமாக இருந்தாலும், அவர்களிடம் எதிர்பார்க்கும் இதர திறன்கள் குறைவாக உள்ளன.
ஆங்கிலத்தில் உரையாடுவது, குழுவாகச் சேர்ந்து செயல்படுவது, தலைமைப் பண்புகளுடன் திகழ்வது, பொது அறிவு, ஒரு பிரச்னை தொடர்பாக தீர்க்கமாக முடிவு எடுக்கும் திறன், பிரச்னை, சவால்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளிட்ட விஷயங்களில் இன்னும் மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்றார்.
கணினிப் பொறியாளர்கள் சங்கத் தலைவராக முகமத் அக்ரம், செயலாளராக எஸ்.மதுப்ரியா, பொருளாளராக எஸ்.ஜெனிபர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஈஸ்வரி பொறியியல் கல்லூரி இயக்குநர் ஆர். நாராயணசாமி, முதல்வர் எம்.சேகர், துணை முதல்வர் கதிரவன், துறைத்தலைவர் எஸ்.கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.