ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை பயோ டெக்னாலஜி மூன்றாமாண்டு மாணவர் கோமதி நாயகம் , "குளோனிங்" முறையில் எதிர்ப்பு சக்தி மருந்து கண்டு பிடித்து, சாதனை படைத்துள்ளார்.
அவர் கூறியதாவது: "மருத்துவ துறையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை, பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த வகை எதிர்ப்பு சக்தி மருந்துகள் , மனித உடலுக்குள் அடிக்கடி செலுத்தப்படுவதால், நுண்கிருமிகள் வலுப்பெற்று, அந்த மருந்துகளை செயலழிக்க செய்து விடுகிறது. இதனால் 50 சதவீதம் எதிர்ப்பு சக்தி மருந்துகளே, நோயை தடுக்கின்றன.
இது தொடர்பாக, பெங்களூர் இன்டியன் அகாடமி ஆப் சயின்ஸ் ஆராய்ச்சிக்கு விண்ணப்பித்தேன். அதன் பின், பாரதிதாசன் பல்கலை பேராசியர் அன்பரசு, ஆராய்ச்சியாளர் பென்சி தங்கப்பன் ஆகியோருடன் இணைந்து, மூன்று மாதம் ஆராய்ச்சி செய்தேன். கேஏபிடி ஜீனை எடுத்து, பாக்டீரியாவின் மரபணுவிடன் சேர்த்தேன். பின் பாக்டீரியாவின் புரதமுடன், கே.ஏ.பிடி. புரதமும் வளர்ச்சியடைந்தை கண்டுபிடித்தேன்.
இந்த மருந்திற்கு, "காபிட்-ஆம்ப்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்து செலுத்தினால், 100 சதவீதம் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது," என்றார்.
இவருக்கு, இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம் இவரது ஆராய்ச்சி கட்டுரை முடிவினை பெற்றுக்கொண்டு, பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளதென, பல்கலை வேந்தர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.