எனதருமை இயக்கத் தலைவர்களே...
தயவு செய்து மீண்டும் எம் மக்களுடன்
கைகோர்த்து அரை கிணறு தாண்டி
அலைக்கழிக்காதீர்கள்..
சங்கங்களால் சிதறிக்கிடக்கும் நாம்
தனித்துப்போராட்டக்
களத்தில்உரிமைகளை வென்றெடுப்பது
பகல் கனவு காண்பதற்கு நிகர். ஒவ்வொரு
சங்கமும் போட்டி போட்டுக்கொண்டு
தன்னிச்சையாக போராட்டங்களை அறிவித்து
வருகிறது.ஆனால் இயக்க
வேறுபாடு இல்லாமல் அனைவரும்
கலந்து கொண்டு போராட்டத்தை
வெற்றியடைய செய்யுமாறும்
அழைப்பு விடுகிறது. எத்தனை(எந்த)
போராட்டத்தில் தான் எம் மக்கள்
கலந்து கொள்வார்கள்.இப்படி மாறி, மாறி
போராட்டங்களை அறிவித்தால், யார் பின்னால்
(யாரை நம்பி) எம் மக்கள்அணிவகுப்பர்???????
இதில் இரண்டு, மூன்று சங்கங்களில்
கட்டாயத்தின் பெயரில்
உறுப்பினர்களாக உள்ளவர்கள் அதிகம்
பேர்.இவர்கள் எந்த சங்கத்திற்கும் ஆதரவாக
இருக்கமுடியாமல் எந்த போராட்டத்திலும்
கலந்து கொள்வதில்லை. ஒரு முறை
அனைவரையும் ஒன்று திரட்டுவதற்கே நம்
இயக்கப்போராளிகள் அனைவரும்
பெரும்பாடுபடுகின்றனர். இப்படி இருக்க
ஆங்காங்கே விளம்பரத்திற்காக கூட்டம்
கூட்டி எம் மக்களின் சக்தியை விரயமாக்கி,
எதிர்பார்ப்புகளை கானல்நீராக்கி விடாதீர்கள்.
உங்களின் கால்புனர்ச்சிகளை மனதில்
வைத்துக்கொண்டு எம்
மக்களை பகடைக்காயாய்
பயன்படுத்தாதீர்கள்.எம் மக்களின் மனதில்
எலி வலையானாலும் தனி வலை வேண்டும்
என்ற
மாற்றுச்சிந்தனையை நீங்களே விதைத்து
விட்டீர்கள்..
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்உறங்குவதில்லை...
உங்களின் ஒற்றுமையின்மை எம் மக்களின்
மாற்றுச் சிந்தனையை மென் மேலும்
தூண்டுகிறது(வலுப்படுத்துகிறது).இந்த
போராட்டம் வலுவிழந்து போக
எந்தவகையிலேனும் நீங்கள் காரணமாக
இருந்தால்,நீங்கள் விதைத்த விதைகள்
அறுவடைக்கு வரவெகு நாட்கள் ஆகாது..
ஊதிய இழப்புகளால் எம் மக்கள் அடைந்த
அதிருப்தியை விட, சங்கங்களின்
ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட
அதிருப்தியே இப்பொழுது
மேலோங்கிக் காணப்படுகிறது. உங்களின்
செயல்பாடுகள், எம் மக்களின்
நம்பிக்கையை வலுவிழக்கச் செய்கிறது..
வலிமையை சிதறடிக்கச்
செய்கிறது, எண்ணிக்கையை குறைக்கிறது.
நமக்குள் ஒற்றுமை இல்லை என்பதை அரசுக்கு
நாமே தெளிவுபடுத்திவிட்டோம். ஊரு
ரெண்டுபட்டா கூத்தாடிக்கு
தான்கொண்டாட்டம்குறது போல்
ஆய்டுச்சி நம்கதை. போதும்,உங்களுக்குள்
ஒருவரை ஒருவர்குறை கூறிக்கொண்டு,நீயா
நானா என்று சண்டை போடுவதை நிறுத்தி
விட்டு, பெரியவர், சிறியவர்
என்று வறட்டு கவ்ரவம்பார்க்காமல்,பழைய
கதையையே பேசிக்கொண்டு இருந்தது
போதும், நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்,
நடக்கப் போவதையாவது சரி செய்ய
முனையுங்கள். யாருக்காக இந்த இயக்கங்கள்
உருவெடுத்தது என்பதை மட்டும்
மனதில்நிறுத்தி போராட்டத்தில்
ஒன்றுபட்டு களமிறங்குங்கள். சூட்டோடு
சூடாக இருக்கும் பொழுதே, எம்
மக்களை கதகதப்புடன் போராட்ட
களத்தில்ஒன்று திரட்டுங்கள்.
நேற்றைய
மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாக
இல்லாமல், நம் மக்களை முடுக்கி விடும்
முயற்சியில் முழு மூச்சாய்
செயல்படுங்கள்.. தன்னிச்சையாக பல
கட்டப் போராட்டங்களை நடத்திவிட்டு
கண்துடைப்பிற்க்காக
காலம்கடந்து ஒன்று கூடி கபடநாடகமாடி
எங்களை ஏமாற்ற
நினைக்காதீர்கள். நன்றே செய், அதையும்
இன்றே செய். அனைத்து சங்கங்களின்
கூட்டுப்போராட்டத்தினாலேயே இடைநிலை
ஆசிரியர்களின்
ஊதியஇழப்புகளை மீட்டெடுக்க முடியும்.
வழிநடத்துபவர்களே வழிமாறிச்செல்லலாமா
????
நமது போராட்டம் ஒரே ஒரு
கோரிக்கையை(SG-grade pay 4200)
கொண்டதாகவும், ஒன்றுபட்ட
போராட்டமாகவும், ஒரே நாள், ஒரே இடம்,
ஒரே நேரம், ஒரே கோரிக்கை, ஒரே குறிக்கோள்
கொண்டதாக இருக்க
வேண்டும். கோட்டையை நோக்கி ஆர்ப்பரித்துச்
செல்வோம். தலைநகரத்தையே தடுமாறச்
செய்திடுவோம்..
அடி மேல் அடி வைத்தால் அம்மி என்ன
அரசையே நகர்த்த வைக்கலாம் 2800-
ல்இருந்து 4200 ஆக.. (இடைநிலை ஆசிரியரின்
grade pay-யினை) இம்முறை சமரசத்திற்கோ,
சால்வைக்கோ... இடமே இல்லை..
மத்தியில் 6வது ஊதியக்குழு இடைநிலை
ஆசிரியர்களுக்கு அறிவித்த ஊதியத்தினை எள்
முனையும் குறையாமல் எப்பாடு பட்டேனும்
போராடிப்
பெற்றிடுவோம். இழப்புகளை சகித்துக்
கொள்ளாமல்எதிர்கொண்டு போராடுவோம்
வாரீர். கொடுத்ததை வாங்கிக்கொள்ள நாம்
ஒன்றும்பிச்சை கேட்கவில்லை ,நமது
உரிமைகளை நம் ஒற்றுமையின் வலிமையால்
வென்றெடுப்போம். போராடுவோம்
வெற்றி பெறுவோம்,
இறுதி வெற்றி.... நமதே.
.இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்!!!!!!
தயவு செய்து இதை அனைத்து
ஆசிரியர்களுக்கும் பகிரவும்.
எப்படியாவது நமது இயக்கப்போராளிகளுக்கு
நமது மக்களின்
ஆதங்கத்தினை பதிவுசெய்வோம்.
-இவன் பாதிக்கப்பட்ட உங்கள்
இயக்கஉறுப்பினர்கள்...
9 comments:
எல்லா தலைவர்களும் இதை மனதில் இறுத்திக்கொணடு செயல்பட வேண்டும்
ஆங்கிலேயன் காலத்திலிருந்து, அவனது பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகி, ஆங்கிலேயர்களை மகிழ்ச்சியடையச் செய்து, இந்தியர்களை துன்பக்கடலில் ஆழ்த்திய சில சுயநல இந்தியர்களின் வழித்தோன்றலாக இருக்கும் சங்கத்தலைவர்களை, இன்றைய ஆசிரியர் சமுதாயத்தை தானும், தன்னைச் சார்ந்தவர்களையும் மட்டும் முன்னேற்றிக் கொள்ள அரும்பாடுபடும் விஷக்கிருமிகளை விட்டு விலகி வாருங்கள்! ஒன்றுபடுவோம்!! போராடுவோம்!!! வெற்றி பெருவோம்!! சாதிப்போம்!
yes yes yes yes....... ingulap jinthabath!!!!!!!!!!!!!!!!!!!!!
ஒன்றுபடுவோம்!! போராடுவோம்!!! வெற்றி பெருவோம்!!
அடி மேல் அடி வைத்தால் அம்மி என்ன
அரசையே நகர்த்த வைக்கலாம் 2800-
ல்இருந்து 4200 ஆக.. (இடைநிலை ஆசிரியரின்
grade pay-யினை) இம்முறை சமரசத்திற்கோ,
சால்வைக்கோ... இடமே இல்லை..
மத்தியில் 6வது ஊதியக்குழு இடைநிலை
ஆசிரியர்களுக்கு அறிவித்த ஊதியத்தினை எள்
முனையும் குறையாமல் எப்பாடு பட்டேனும்
போராடிப்
பெற்றிடுவோம்.
இடைநிலை ஆசிரியர்களில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் 2009 ஜூன் 1 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் தான். இவர் சொல்வது போல 4200 கிரேடு ஊதியம் பெற்றால் மட்டும் போதாது
இவர் 2009 ஜூன் மாதத்துக்கு முன் பணி நியமனம் பெற்றவராக இருக்கும். அதனால்தான் தனக்கு வேண்டிய கோரிக்கைக்காக அனைவரும் போராட வேண்டு,் என்கிறார்.
2009 ஜூனுக்குப்பின் நியமனம் பெற்றவர்கள் பலன் அடைய அடிப்படை ஊதியம் 9300 ஆக அதிகரிக்க வேண்டும்.
நாங்கள் (2009 பின் நியமிக்கப்பட்டவர்கள்) ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல.9300+4200 என்பதே முழுமுதல் கோரிக்கையாக இருத்தல் வேண்டும்.
Post a Comment