"நாம் படிக்கும் புத்தகங்கள் நம் வாழ்க்கையை புரட்டி போடக்கூடியதாக இருக்க வேண்டும்" என புத்தக திருவிழாவில் இளசை சுந்தரம் பேசினார்.
ஈரோடு வ.உ.சி., பூங்காவில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில், இளசை சுந்தரம் பேசியதாவது: "மனிதர்களுக்குள் ஏற்படும் உடல் பிரச்னைகளுக்கு மருந்து மாத்திரைகள் உள்ளது. ஆனால், மனப்பிரச்னைகளுக்கு, புத்தகங்கள் மருந்தாக உள்ளது. சவால்களை சந்திக்காமல் சிகரத்தை தொடமுடியாது.
நாட்டில் மக்கள் தொகைத் தான் அதிகரித்துள்ளது. ஆனால், நல்ல மனமுடைய மனிதர்கள் எண்ணிக்கை குறைவாகத் தான் உள்ளது. நாம் தேர்வு செய்து படிக்கும் புத்தகங்கள், நமது வாழ்க்கை முறையில், புரட்டிப் போடக்கூடியதாக இருக்க வேண்டும்.
புத்தகங்களை படிப்பதில், பரவச நிலையை அடைய வேண்டும். இன்றைய "டிவி" சேனல்களில், மக்களை நற்சிந்தனையாளர்களாக மாற்றக்கூடிய நிகழ்ச்சிகள் இல்லாததால், குடும்ப அமைப்புகள் சீர்கேட்டு உள்ளது.
டால்ஸ்டாய்க்கு காந்தி எழுதிய கடிதத்தில், ஒருவர் நமக்கு துன்பம் செய்தால், அதற்காக அவர்களை பழிவாங்குவதைவிட, மன்னித்து விடவேண்டும், என எழுதினார். அதற்கு பதிலளித்த கடிதம் எழுதிய டால்ஸ்டாய், "மன்னித்து விடுவதைக் காட்டிலும், அவருக்கு நன்மை செய்ய வேண்டும்," என, உங்கள் நாட்டில் எழுதப்பட்ட திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. எனவே, நான் அவற்றை பின்பற்றி வருகிறேன், என எழுதினார். எனவே, மனிதநேயமிக்க புத்தகத்தை படித்து பக்குவம் அடைய வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.