அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் இன்று அறிவித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அகர்-மால்வா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், 'அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம்.
இதைப்போன்ற விவகாரங்களில் மத்திய பிரதேச மாநில அரசு தனக்கே உரிய தனித்தன்மையுடன் செயல்படும். இவ்விவகாரத்தில் இதர மாநிலங்களின் செயல்பாட்டை நாங்கள் பின்பற்ற மாட்டோம்' என்று கூறினார்.
ஏற்கனவே, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக சத்தீஸ்கர் மாநிலம் அறிவித்திருந்தது.
மத்திய பிரதேசத்தை பொருத்தவரை தற்போதைய நிலவரப்படி, பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், சிறப்பு டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆகவும், இதர பிரிவு அரசு ஊழியர்களுக்கு 60 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தையும் சமப்படுத்தி அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 62 ஆக அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.