Pages

Monday, August 26, 2013

ஆக.30-ல் மறியல் போராட்டம் : 50 ஆயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு

மத்திய அரசுக்கு இணையாக தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற் குழு முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 25.8.2013 அன்று குற்றாலத் தில் மாநிலத் தலைவர் தி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, சங்கத்தின் மாநிலத் தலைவர் தி.கண்ணன், பொதுச் செயலாளர்(பொறுப்பு) செ.பாலச்சந்தர், பொருளாளர் ச.மோசஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ஜாக்டி அரசு ஊழியர் பேரமைப்பின் ஒன்றுபட்ட தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த ஊதியம் கடந்த 1.6.1988 முதல் 22 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டு ஆசிரியர்கள் பெற்று வந்தனர். இந்நிலையில் தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழுவிலும், ஒரு நபர் குறை தீர்க்கும் குழுவிலும், மூன்று நபர் குறை தீர்க்கும் குழுவிலும் இந்த ஊதிய விகிதம் மறுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. 

கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் சரிசெய்யப்படும் எனவும், தன் பங்கேற்பு ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறையே அமுல்படுத்தப்படும் எனவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றப் படவில்லை.

எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்ற 30.08.2013 அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 50 ஆயிரத்தி ற்கும் அதிகமான ஆசிரியர்களைத் திரட்டி பெருந்திரள் மறியல் போராட்டங்களை நடத்துவது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.