Pages

Friday, August 30, 2013

23 ஆண்டுகளாக உயராத கல்வி ஊக்கத்தொகை

பள்ளி கல்வித் துறையில், 1991 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாவட்டத்திற்கு 3 ஆயிரம் வரை தேர்வு எழுதும் மாணவர்களில், 50 மாணவர், 50 மாணவியர் என, 100 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர் களுக்கு 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு, ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.


இத்திட்டம் துவங்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, 8ம் வகுப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர்களின் பொருளாதார நிலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்தும், இந்த ஊக்கத் தொகை மட்டும் இதுவரை உயர்த்தப்படவில்லை. கடந்த 1991ல், இத்தொகை பெற மாணவரின் பெற்றோர் வருவாய் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமாக இருந்தது. தற்போது, ரூ.ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊக்கத் தொகை மட்டும் மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என, மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது: தற்போது, 8ம் வகுப்பு படிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்த நிலையில் ஒரு மாவட்டத்திற்கு, குறைந்த பட்சம் 500 மாணவர்களை தேர்வு செய்து, உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி, வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.