Pages

Saturday, August 31, 2013

மத்திய அரசு ஆசியர்களுக்கு இணையான ஊதியம் கோரி மறியல்: 20 ஆயிரம் ஆசியர்கள் கைது

மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான ஊதி யம் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.30) தமிழகம் முழுவதும் ஆரம் பப்பள்ளி ஆசிரியர்கள் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் சாலை மறியல் போரட்டம் நடத்தி னர். இப்போராட்டங்களில் 20 ஆயிரத்திற்கும் அதிக மான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங் கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி. பாலச்சந்தர் தலைமை வகித்தார். இந்த மறியலில் 360 ஆசிரியர் களை காவல்துறையினர் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத் தில், செங்கற்பட்டு அம் பேத்கர் சிலை அருகே நடந்த மறியல் போராட்டத் தில் மாநிலத் தலைவர் கண்ணன் உட்பட 400 ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்த னர்.ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மறியல் போரா ட்டத்தில் சங்கத்தின் மாநி லப் பொருளாளர் மோசஸ் தலைமையில் மறியல் நடைபெற்றது.

இதேபோல், திருவள்ளுர், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவாரூர், தஞ்சை, நாகை, நெல்லை, குமரி, சிவகங்கை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக் குடி, நீலகிரி, மதுரை, சேலம், கரூர், விருதுநகர், தேனி உளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களி லும் மாநில, மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள் தலைமையில் மறியல் நடை பெற்ற மறியலில் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஆசிரியர் களை காவல்துறையினர் கைது செய்தனர்.தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி மத்திய அரசு ஆசியர்க ளுக்கு இணையான ஊதி யம் தமிழ் நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்க ளுக்கும் வழங்கப்படும் என்று இன்றைய முதல மைச்சர் அறிவித்தார். ஆனால், இதுவரை நிறை வேற்றவில்லை. ஆகவே, முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகை யில் இந்த மறியல் போராட் டத்தை ஆசிரியர்கள் நடத் தினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.