அரசுக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்திட்டது.
இதன் அடிப்படையில் தேர்வு பெற்ற 14 மாணவ மாணவிகளும், 3 விரிவுரையாளர்களும் வருகிற 28ந் தேதி வெளிநாடு செல்கிறார்கள். அவர்களுக்கான அனுமதி மற்றும் விமான டிக்கெட்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.இது குறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி யினை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியரும் குறிப்பாக அரசுக் கல்லூரிகளில் பயிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்களும் பெற்று அவர்களது திறன் மேம்பாடு அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தினை செயல்படுத்தும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகின்றது.அந்த அடிப்படையில், அரசுக் கல்லூரிகளில் பயின்று வரும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களின் கல்வி திறன் மற்றும் பேராசிரியர்களின் கற்பிப்பு திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், அவர்களை அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி குறிப்பிட்ட கால அளவுக்கு கல்வி கற்கச் செய்யவும், ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவும் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கும், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே 13.12.2012 அன்று தலைமைச் செயலகத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 2013 ஆம் ஆண்டு முதல் 25 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள் அயல்நாடு சென்று கல்வி கற்கவும், பயிற்சி மேற்கொள்ளவும், ஒவ்வொரு மாணவருக்கும், பேராசிரியருக்கும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் மூலம் 15 லட்சம் ரூபாய் அனுமதித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.