Pages

Monday, July 29, 2013

G.O.No.237 Dt.22.7.2013 - Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம்

நம் நண்பர்கள் தொடர்ந்து நம்மிடம் இது குறித்து கேட்டுவருவதால் இதுபற்றிய ஓர் விளக்கத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். 

அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது பத்தியில் சங்கங்களின் கோரிக்கை பற்றியும் குறைதீர்க்கும் பிரிவின் முடிவு பற்றியும் கூறப்பட்டுள்ளது. 

பத்தி 3 இல் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Revised scales of pay - இல் selection grade/special grade நிலையை அடையும் போது an additional increment benefit (3% + 3%) பெற அரசு வகை உத்தரவிட்டுள்ளது. 

நமது விளக்கம்:

31.12.2005 - இன் போது பணியில் இருந்தவர்கள் 1.1.2006 இல் புதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்திருப்பார்கள். (தொகுப்பூதியதாரர்கள் 1.6.2006 இல் )

1.1.2006 அன்று தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள் 5200 -20200 +G.P.2800 லும், தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 9300 விகிதத்தில் G.P.4300 லும் வைக்கப்பட்டிருப்பர்.

இவ்வாறாக 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் செய்யப்பட்ட ஊதிய நிர்ணயத்தை தொடர்ந்து 2800 தர ஊதியத்தில் உள்ள தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள், தேர்வுநிலை அடையும்போது தற்போது கூடுதலாக 3% INCREMENT பெற்று கொள்ளலாம். உதாரணமாக 2800 தர ஊதியத்தில் உள்ள ஒருவர் 2008 ஆம் ஆண்டு தேர்வுநிலையை அடைந்திருந்தால் அப்போது 3% INCREMENT பெற்றிருப்பார். அவர் தற்போது கூடுதலாக 3% INCREMENT சேர்த்து கணக்கிட்டுகொள்ளலாம். நிலுவைத்தொகை கிடையாது. பணப்பயன் 1.4.2013 முதல் பெறலாம்.

இதைபோல 1.1.2006 இல் தேர்வுநிலை பெற்று 9300 ஊதிய விகிதத்தில் 4300 தர ஊதியத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டவர்கள், அவர்கள் சிறப்புநிலை அடையும்போது கூடுதலாக 3% INCREMENT பெற்றுகொள்ளலாம். 

தொகுப்பூதியதாரர்களும் மற்றும் அதற்க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களும் தேர்வுநிலை அடையும்போது 3% + 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.

சுருக்கமாக சொன்னால் REVISED SCALES OF PAY இல் தேர்வுநிலை/சிறப்புநிலை பெறுபவர்கள் 3% + 3% INCREMENT பெறலாம். 

OPTION அளித்து தேர்வு நிலை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்:

OPTION அளித்து தேர்வுநிலை ஊதிய நிர்ணயமான 9300 + G.P. 4300 இல் ஊதியம் நிர்ணயம் செய்துகொண்டவர்கள் சிலர் நாங்களும் 1.1.2006 இக்கு பின்னர்தான் தேர்வுநிலை பெற்றோம் எனவே எங்களுக்கும் கூடுதலாக 3% உண்டா என்று கேட்கின்றனர். இல்லை என்றால் சங்கடப்படுகின்றனர். எனவே விளக்கம் கூற விரும்புகிறோம்.

உதாரணமாக 1.1.2008 இல் தேர்வுநிலை பெற்றவர்கள் 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது 5200 - 20200 + 2800 தான் பெற இயலும். எனவே அவர்1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.1.2008 வரை முந்தைய அதாவது பழைய ஊதிய விகிதத்திலேயே இருந்துவிட்டு 1.1.2008 இல் புதிய ஊதிய விகிதத்தில் தங்களது ஊதியத்தை நிர்ணயம் செய்துகொண்டிருப்பார். 

இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் OPTION அளித்தவர்கள் பழைய ஊதிய விகிதத்தில் தான் தேர்வுநிலை பெற்று, பின்னர் புதிய ஊதியத்திற்கு வருகின்றனர். இவர்கள் அடுத்ததாக சிறப்புநிலை பெறும்போதுதான் கூடுதலாக இந்த 3% பெற இயலும். 
நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்ட்

9 comments:

  1. எனது சந்தேகத்தை தீர்க்க உதவுங்கள்...

    01/06/2006ல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்தவர்களுக்கு, தற்போது Option கொடுத்து பழைய ஊதியத்தை தொடர ஏதேனும் வழிவகை இருக்கிறதா.....?

    அதாவது "வரலாற்று சிறப்பு வாய்ந்த" இந்த 6வது ஊதிய குழுவின் ஊதிய நிர்ணயம் என்ற அரக்கனது பிடியிலிருந்து விடுபட விமோச்சனம் உள்ளதா.....?

    Please Reply.....

    ReplyDelete
    Replies
    1. According to G.O.No 240 this is not possible

      Delete
    2. Sir,
      Thank You for Your Reply...

      Delete
  2. பதவி உயர்வுக்கு 3 சதவிகிதத்துடன் தர ஊதிய உயர்வான சுமார் 100 முதல் 300 வரை மட்டுமே வழங்கப்படும் நிலையில் !!!.

    பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்கள் / உயர் பொறுப்பு வேண்டாம் என்பவர்கள் / வாய்ப்பு இல்லாதவர்கள் - பதவி உயர்வு பெறுபவர்களைவிட கூடுதல் பலன் (ஊதியம்) பெறுவது எந்த வகையில் நியாயம் ?. மேலும் இது ஊதிய முரண்பாட்டை (pay anomaly) உண்டாக்கும் ?

    ReplyDelete
  3. Myself joined duty on 10.01.1999 and selection grade on 10.01.2009. Now myself give option to fix pay in 6th pay from seletion grade is benefit to me please calrify

    ReplyDelete
  4. நண்பரே...

    நீங்கள் கூறும் ஊதிய முரண்பாட்டிற்கு 6வது ஊதிய குழுவின் பரிந்துரை காரணமா....?

    இல்லை,
    பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்கள் / உயர் பொறுப்பு வேண்டாம் என்பவர்கள் / வாய்ப்பு இல்லாதவர்கள் காரணமா....?

    ReplyDelete
  5. I have got Selection Grade on 29.09.2007. I have not given option for new scale of pay of 9300+ G.P -4300. Am I benefited in this old scale of Pay with 3% + 3% ? or I can give option now?

    ReplyDelete
  6. Hello Iam working in TNEB. Explain the wage revision for the year 2014.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.