Pages

Sunday, July 28, 2013

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை சரிபார்க்க ஆன்லைன் வசதி

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை பிறதுறையினரும் சரி பார்க்க ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

ராணுவம், எல்லைபாதுகாப்புப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் போன்ற பதவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தான் அடிப்படை கல்வித்தகுதியாக உள்ளது. இது போல மாநில அரசின் பல போட்டி தேர்வுகளுக்கு இதே கல்வி தகுதிதான் கோரப்படுகிறது. இப்படிப்பட்ட தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் போது அதன் உண்மைத்தன்மை சோதனை செய்யப்படுகிறது.

இதற்காக சான்றிதழ் நகலுடன், வேலை வழங்கும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் கேரள அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்புகிறது. இவ்வாறு அனுப்பும் கடிதங்களை பரிசீலித்து, சான்றிதழ்களை சரிபார்த்து பதில் அனுப்ப மாத கணக்கில் கால விரயம் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை வழங்குதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட காலவிரயத்தை தவிர்க்கவும், போலி சான்றிதழ்கள் புழக்கத்தில் வருவதை தடுக்கவும் வசதியாக ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக தனி யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவை தயாரிக்கப்பட்டு தேவைப்படும் துறைக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் கேரள தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று சான்றிதழ்களை சரிபார்க்க முடியும்.

இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக கேரள அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.