Pages

Friday, July 19, 2013

பள்ளி மாணாக்கர்களை ஊக்குவிக்கும் புதிய முயற்சி : தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி சார்பில் ஏற்பாடு

IMG_1266.jpg அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி 8ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை கல்லூரியின் ஆய்வகங்களை பார்வையிட்டனர். தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியரின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிச்செயலர் திரு.சோமசுந்தரம் அவர்களின் ஆலோசனைப் பேரில் தலைமை ஆசிரியர் திரு.எல்.சொக்கலிங்கம், பட்டதாரி ஆசிரியர் திரு.செல்வம், இடைநிலை ஆசிரியர் திருமதி.முத்துலட்சுமி ஆகியோர்
IMG_1287.jpg
IMG_1268.jpgஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை கல்லூரிக்கு அழைத்து சென்றனர். கல்லூரி முதல்வர் திரு.சந்திரமோகன் தலைமையில், விலங்கியல் துறை தலைவர் திரு.பட்சிராஜன் முன்னிலை வகிக்க வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ மாணவியர்கள் விலங்கியல் துறையில் பாம்பு இனங்கள், பூச்சிகள்,
பவள பாறைகள், மரபியல் மீன் 
இனங்கள், பறவை இனங்கள் ஆகியவற்றை ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும் இயற்பியல், வேதியியல், தாவரவியல் துறை சார்ந்த செய்முறை பயிற்சிகளும் மாணாக்கர்களுக்கு செய்து காட்டினர். நிறைவாக மாலையில் கல்லூரி முதல்வர் திரு.சந்திரமோகன் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.எல்.சொக்கலிங்கம் முன்னிலை வகிக்க பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்லூரி முதல்வர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். முடிவில் தாவரவியல் துறை துணை தலைவர் திருமதி.வீரலட்சுமி நன்றி உரையாற்றினார்.
 


No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.