தமிழ்நாடு அறிவியல் மன்றங்கள் கூட்டமைப்பு சார்பில், முதுகலைப் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று துவங்குகிறது.
சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், எளிமையான முறையில், முழு ஈடுபாட்டுடன் அறிவியல் பாடங்களை கற்றுக் கொள்ள, தமிழ்நாடு அறிவியல் மன்றங்கள் கூட்டமைப்பு, பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, வேதியியல், இயற்பியல் முதுநிலைப் பட்டதாரி ஆசியர்களுக்கு, "அறிவியல் கற்பித்தலில் புதிய முறைகள்" எனும் தலைப்பில், இரு நாள் பயிற்சி வகுப்பு, இன்று துவங்கி (26ம் தேதி), நாளை வரை நடக்கிறது.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எப்படிப் பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்து, பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை, காந்தி மண்டப சாலை, அறிவியல் நகரில் நடக்கும் பயிற்சி வகுப்பை, உயர் கல்வித் துறை கூடுதல் செயலர் உமா மகேஸ்வரி, இன்று துவக்கி வைக்கிறார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.