Pages

Monday, July 22, 2013

கல்வி வளர்ச்சிக்கு ஆய்வுகள் அவசியம்

"கல்வி வளர்ச்சிக்கு ஆய்வுகள் அவசியம்" என குழந்தைசாமி அறக்கட்டளையின் கல்வித் திருவிழாவில், முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி கூறினார்.

குழந்தைசாமி கல்வி மற்றும் ஆய்வு அறக்கட்டளை சார்பில், 15ம் ஆண்டு கல்வித் திருவிழா, நேற்று, கரூர் உத்தமி பொன்னுசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், அறக்கட்டளை துணைத் தலைவர் தங்கராசு வரவேற்றார்.

காமராஜர், அண்ணா, இந்திரா காந்தி பல்கலைகளின் முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி தலைமை வகித்து பேசியதாவது: உலக மக்கள் தொகையில் யூதர், ஐந்தில் ஒரு பங்கு மட்டும் உள்ளனர். ஆனால், கல்வி அறிவில் சிறந்து விளங்குவதால், இதுவரை நோபல் பரிசில், 20 சதவீதத்தை அவர்களே பெற்றுள்ளனர்.

கடந்த, 1985ம் ஆண்டு வரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மொழிப் பாடத்தில் தமிழை படிக்காதவர்கள், மாநில அளவில் முதலிடம் பெற்று வந்தனர். கல்வித் துறையில், 1986ம் ஆண்டு முதல் பாடவாரியாக, முதலிடம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

தற்போது, பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற நோக்கில், கல்விமுறை இருக்கிறது. இது மட்டுமல்லாமல், கைத்தொழில் சார்ந்த கல்வியை கற்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்கு ஆய்வுகள் முக்கியம். அப்போது தான் கல்வியின் தரம் வளரும். கல்வி ஆய்வுகளுக்கு வழிவகைகளை, நாம் ஏற்படுத்த வேண்டியது முக்கியம். இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து டி.என்.பி.எஸ்.ஸி., குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, துணை கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வன், வணிக வரித்துறை உதவி கமிஷனராக தேர்வாகியுள்ள, நல்லரசி ஆகியோரை பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது. மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்டத்தில் பாடவாரியாக, முதலிடம் பெற்றவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.