செயலாளர் ஓய்வு பிரிவு திருஅ.காத்தான் முன்னிலை வகித்தார்கள். மருங்காபுரி வட்டார செயலாளர் திருப.அழகர் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்திற்கு கோரிக்கை விளக்க சிறப்பு பேச்சாளராக மாநில துணைச் செயலாளர் மதிப்புமிகு. ஈ.ராஜேந்திரன் வருகை புரிந்து எழுச்சியுரை ஆற்றினார். மேலும்
திருச்சிராப்பள்ளி மாவட்ட செயலாளர் திரு.ஜோ.ஆல்பர்ட் தாஸ் மற்றும் மாநில போரட்ட குழு உறுப்பினர்திருசெ.நீலகண்டன்அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.மணப்பாறை வட்டார செயலாளர் திரு.சி.ஆல்பர்ட் சகாயராஜ், தலைவர் திரு. சேவியர் பால்ராஜ் அவர்கள் வருகை புரிந்தார்கள் . இயக்கத்தின் உயிர்நாடி,தோளோடு தோள் கொடுத்து இயக்கத்தை கட்டிக்காக்கும் இயக்க உறுப்பினர்கள் 127 பேர் கலந்து கொண்டு மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலேயே மருங்காபுரி வட்டாரம் சிறந்த வட்டாரம் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைச் செயலாளர் மதிப்புமிகு. இராஜேந்திரன் புகழாரம் சூட்டினார்கள். ஆயத்த கூட்டம் சிறப்பாக நடைபெற துணைச் செயலாளர் திரு.க.இராமச்சந்திரன் &சி.ராணி நாச்சியார் ,துணைத்தலைவர் சோ.பழனிச்சாமி &செ.ஜான்சி , உதவினார்கள். திரு.அழகு நன்றியுரை ஆற்றினார்கள். இந்த விழாவினை மருங்காபுரி வட்டார செயற்குழு உறுப்பினர்கள் திரு.ச.ரூஸ்வெல்ட் & திரு.கு.செல்வக்குமார் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.