Pages

Thursday, July 18, 2013

மருத்துவப் படிப்பில் சேர ஒரே நுழைவுத்தேர்வு இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத்துவ கவுன்சிலிங் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் ஒரே மாதிரியான தகுதியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய அளவிலான மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (என்.இ.இ.டி) மருத்துவ கவுன்சிலிங் கொண்டு வர வேண்டும் என விரும்பியது.

மேலும் தகுதி இல்லாத நபர்கள் பணம் பெற்று சேர்க்கப்படுவதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவானது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேர்வு முறையே பின்பற்றலாம் என கடந்த இடைக்கால தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அல்டாமஸ் கபீர் தலைமையிலான 3 பேரை கொண்ட நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். இதன்படி நாட்டில் ஒரே மாதிரியான தகுதி நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பளித்தனர். அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இதில் 2 நீதிபதிகள் மருத்துவ கவுன்சிலிங் முயற்சியை எதிர்த்தனர். ஒரு நீதிபதி மட்டும் ஆதரித்தார். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் பாதிப்பு வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை பல்வேறு அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் வரவேற்றுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.