Pages

Monday, July 29, 2013

உதவி தொடக்க கல்விஅதிகாரிகளுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்

உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று மேற்கு மண்டல தொடக்க கல்வி அதிகாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்கு மண்டல கூட்டம்

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல தொடக்க கல்வி அதிகாரிகள் சங்க கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் க.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ப.மாதவராஜன், துணைச்செயலாளர்கள் பா.சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் சி.தேவேந்திரன், செயலாளர் கு.கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சி.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

பதவி உயர்வு

இதில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடக்க கல்வி அதிகாரிகளாக பணி அமர்த்தும்போது அந்த பணியிடங்களை பதவி உயர்வு பணியிடமாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும். உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் கு.முத்து, கரூர் மாவட்ட செயலாளர் சி.கோபால் உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் 70 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக மேற்கு மண்டல செயலாளர் த.ஞானசேகரன் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் சி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.