Pages

Saturday, July 13, 2013

சி.இ.ஓ., டி.இ.ஓ., உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்? ஆசிரியர் கூட்டணி கேள்வி

"பள்ளி கல்வித் துறையில், சி.இ.ஓ., - டி.இ.ஓ., உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?" என தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி அண்ணாமலை, கேள்வி எழுப்பி உள்ளார்.
 
அவரது அறிக்கை: முதன்மை கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் போன்ற பதவிகளில், 50க்கும் மேற்பட்ட இடங்கள், காலியாக உள்ளன. பதவி உயர்வுக்கு, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகும், காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?

கல்வியில், மிகவும் பின்தங்கியுள்ள பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில், சி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. திருச்சி, ஈரோடு, சேலம் என, பல மாவட்டங்களில், மாவட்ட அளவில், பல்வேறு அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தேர்வுத் துறையில், இணை இயக்குனர் பதவி (மேல்நிலை), தொடக்க கல்வித் துறை, இணை இயக்குனர், கருப்பசாமியிடம் கூடுதலாக தரப்பட்டுள்ளது. மற்றொரு இணை இயக்குனர், தங்கமாரிக்கு, டி.ஆர்.பி.,யில், கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித் துறையில், பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கண்ணப்பனிடம், நூலகத் துறை, இணை இயக்குனர் பதவி, கூடுதலாக தரப்பட்டுள்ளது. துறையில், எப்போது பார்த்தாலும், ஆய்வுக் கூட்டங்கள் நடக்கின்றன. ஆனாலும், காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்னையில், முதல்வர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.