ஆகஸ்டில் நடக்க உள்ள, டி.இ.டி., தேர்வை, எளிதில் தேர்வர்கள் எதிர்கொள்ளும் வகையில், "தினமலர்" நாளிதழ் பயிற்சி முகாம், நாளை (28ம் தேதி) சென்னை, தி.நகரில் நடத்த உள்ளது.
அரசு, தனியார் பள்ளிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது, அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 15 ஆயிரம், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆகஸ்டில் நடக்கிறது.
இத்தேர்வுக்கு, 6.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, வழிகாட்டும் வகையில், "தினமலர்" நாளிதழ், டி.இ.டி., இலவச பயிற்சி முகாமை நடக்கிறது.
ஆசிரியர் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்வது எப்படி, கடந்தாண்டு டி.இ.டி., தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் விவரங்கள், தேர்வை எழுதும் நுணுக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் பயிற்சி முகாமில் வழங்கப்பட உள்ளன.
நிகழ்ச்சியில், நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம், நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங் நிர்வாக அதிகாரி வெங்கடாஜலபதி, அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி உதவியாளர் கணேசன், மதுரை வேலம்மாள் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பிரகாஷ் உள்ளிட்ட வல்லுனர்கள், டி.இ.டி., தேர்வை எளிதில் எதிர் கொள்வது குறித்து, ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
சென்னை, தி.நகர், பி.டி.தியாகராய ஹாலில் நடக்க உள்ள பயிற்சி முகாம், காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை நடக்க உள்ளது; அனுமதி இலவசம். பங்கேற்பவர்களுக்கு, டி.இ.டி., கடந்தாண்டு வினா தாள் நகல் அடங்கிய, எட்டு பக்க புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.