Pages

Monday, July 22, 2013

புத்தகம் வளர்ச்சிக்கு அஸ்திவாரம்

இணைய தளம், மொபைல் போன் என நவீன தொழில்நுட்பத்தின் வீச்சால், தகவல் பரிமாற்றம் வளர்ந்துள்ளது. எனினும், வாசிக்கும் பழக்கத்தின் நுட்பமான பயனை, அனுபவிப்பவர் மட்டுமே அறிவர்.

நூலக பயன்பாட்டை ஒருவர் அறிந்து கொள்ளும் சரியான தருணம் என்பது, பள்ளிப்பருவம் தான். இப்பருவத்தில் நூலகத்தை சரியாக பயன்படுத்த துவங்கிவிட்டால், ஒருவரின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக அமையும். நூலகங்களை சரியான முறையில் மாணவர்கள் பயன்படுத்துவது குறித்து, ஆய்வாளர்கள் சில குறிப்புகளை தெரிவிக்கின்றனர்.

* வகுப்பறை நூலகங்களில், குழந்தை இலக்கியம், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, படக்கதை, கற்பனைக் கதை, நகைச்சுவை, புதிர், நெடுங்கதை, வாழ்க்கைக் குறிப்பு, நாளிதழ்கள் போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.

* சிறு கல்வித் திட்டங்கள் (புராஜெக்ட்), டைரிகள், சுயமாக உருவாக்கப்பட்ட புத்தகங்கள் ஆகியவை நுõலகங்களில் இடம் பெற வேண்டும். இவை, முக்கிய தகவல் சுரங்கங்களாக அமையும்.

* வீட்டில் படித்த புத்தகங்களையும் வகுப்பறை நூலகங்களில் வைப்பது பலன் தரும். பங்கிடும் பண்பை வளர்ப்பதோடு, நூலகத்தின் செழுமையை இது உறுதி செய்யும்.

* மாணவர்களோடு நூலகத்திற்கு ஆசிரியர்கள் சென்று, தேவைப்படும் புத்தகங்களை பெறுவதில் உதவுவது முக்கியம். வகுப்பறையில் நடத்தப்படும் பாடத்திற்கு, தேவையான நூல்களை நூலகங்களில் முன்பே வைத்திட வேண்டும்.

* நூலகங்களில் அனைத்து மொழி நூல்களையும் வைப்பது, மொழிகளின் இணையான அர்த்தத்தை உணர உதவும்.

* நூலகங்களில் வாசிப்பதற்குக் குறிப்பிட்ட காலத்தை ஒதுக்குமாறு செய்ய வேண்டும். இது வாசிக்க, தனி முக்கியத்துவத்தை ஏற்படுத்தும்.

* படித்தது பற்றிய கருத்துக்களை அறிவதும் முக்கியம்.

* தேவைக்கேற்ப புதிய புத்தகங்கள், இதழ்கள், பத்திரிகைகள் வாங்கப்பட வேண்டும்.

* வகுப்பறையிலோ சிறு குழுவிலோ, புத்தக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் செய்வதும் முக்கியம். புத்தகங்களை குழந்தைகளே தேர்வு செய்யச் சொல்வதும் அவசியம்.

* எதிர்பாராமல் புத்தகங்கள் கிழிந்து விட்டால், குழந்தைகளே அதை சரி செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

* நூலகங்களை நடத்துவது அதிக செலவு பிடிக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. பல பதிப்பகங்கள், விலை குறைந்த புத்தகங்களை வெளியிடுகின்றன. எனவே நூலகங்களை ஏற்படுத்துமாறு, பெற்றோரும் வலியுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.